Feb 14, 2019 05:18 AM

விஜய், அஜித்துக்கு கிடைக்காத பெருமை! - சூர்யாவுக்கு கிடைத்தது

விஜய், அஜித்துக்கு கிடைக்காத பெருமை! - சூர்யாவுக்கு கிடைத்தது

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா, வித்தியாசமான கதைகள் தேர்வு செய்வதிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் அதிகமான ஈடுபாடு காட்டி வருகிறார். அதே சமயம், ரசிகர்களுக்காக மாஸான கமர்ஷியல் மசாலாப் படங்களிலும் அவ்வபோது நடித்து வருகிறார்.

 

தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படம் அரசியல் கதைக்களம் கொண்ட படம் என்பது தான் எதிர்ப்பார்ப்புக்கான முக்கிய காரணம்.

 

இந்த நிலையில், ‘என்.ஜி.கே’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது. இந்த டீசரை தமிழகத்தின் பல திரையரங்குகளில் கொண்டாட்டத்தோடு வெளியிட இருக்கிறார்கள். இதையெல்லாம் விட அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கேரளாவிலும் பல திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்தோடு டீசர் வெளியாக உள்ளது.

 

விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் பலருக்கு ஆந்திரா மற்றும் கேரளாவில் ரசிகர்கள் இருந்தாலும், எந்த ஹீரோக்களின் படத்தின் டீசரும் இதுபோன்ற கொண்டாட்டத்தோடு அம்மாநிலங்களில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆக, லேட்டா வந்தாலும் சூர்யா மாஸாகவே வருகிறார்.