May 13, 2019 08:55 AM

விஜய், அஜித்தை வைத்து படம் தயாரித்தவர் மரணம்!

விஜய், அஜித்தை வைத்து படம் தயாரித்தவர் மரணம்!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

 

பழபெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா வாகினி புரொடக்‌ஷன்ஸ் பி.நாகி ரெட்டியின் இளைய மகனான பி.வெங்கட்ராம ரெட்டி, விஜய் நடித்த பைரவா, அஜித் நடித்த ‘வீரம்,’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘தாமிரபரணி’ ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘சங்கத்தமிழன்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.

 

இந்த நிலையில், உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பி.வெங்கட்ராம ரெட்டி, நேற்று மதியம் 1 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 

 

வெங்கட்ராம ரெட்டிக்கு பி.பாரதி ரெட்டி என்ற மனைவியும், அர்ச்சனா ரெட்டி, ஆராதனா ரெட்டி என்ற இரண்டு பெண்களும், ராஜேஷ் ரெட்டி என்ற ஒரு மகனும் இருக்கிறார்.