கதாநாயகியின் ஆசையை நிறைவேற்றிய விஜய் ஆண்டனி!

தியா மூவிஸ் சார்பில் பிரதீப் என்பவர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அண்ட்ரூவ் லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கொலைகாரன்’. இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் ஹீரோயினாக ஆஷிமா நர்வல் நடித்திருக்கிறார்.
நாளை (ஜுன் 7) உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தை பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.
படத்திற்கான புரோமோஷன்கள் வித்தியாசமான முறையில் நடைபெற்று வரும் நிலையில், ஐதராபாத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையில் பேசும் போது, விஜய் ஆண்டனி தன்னுடன் மேடையில் நடனம் ஆட வேண்டும், என்று விரும்பினார்.
முதலில் சற்று தயங்கினாலும், பிறகு மேடை ஏறிய விஜய் ஆண்டனி நாயகி ஆசைப்பட்டது போலவே மேடையில் நடனம் ஆடி அசத்தினார்.
கூச்ச சுபாவம் கொண்ட விஜய் ஆண்டனி, திரைப்படங்களில் நடனம் ஆடியிருந்தாலும், மேடையில் மக்கள் முன்னிலையில் நடனம் ஆடியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.