Feb 12, 2019 08:35 AM

விஜய் ஆண்டனிக்கு வந்த அரசியல் ஆசை!

விஜய் ஆண்டனிக்கு வந்த அரசியல் ஆசை!

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ் சினிமா நடிகைகள் பலருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது. சிலர் நேரடியாக அரசியலில் ஈடுபட, சிலரோ மறைமுகமாக தங்களது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

 

இதற்கிடையே, அரசியல் சம்மந்தமான திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் அதிகமாக தயாராகி வருகிறது. காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ‘எல்.கே.ஜி’ என்ற பெயரில் அரசியல் நையாண்டி படம் ஒன்றை இயக்கி ஹீரோவாக நடித்து வரும் நிலையில், தற்போது விஜய் ஆண்டனியும் அரசியல் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

 

ஏற்கனவே ‘எமன்’ படத்தில் அரசியல் கதைக்களத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டணி, ‘மெட்ரோ’ பட இயக்குநர் ஆனந்த் கிருணன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாக உள்ளது.

 

இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கிறார். இவர், ஏற்கனவே சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.