கை மாறிய விஜய் ஆண்டனியின் ‘காக்கி’

இயக்குநர் செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்து வரும் "காக்கி" திரைப்படத்தின் உரிமைகளை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வாங்கியிருக்கிறது.
இயக்குநர் விஜய் மில்டன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் ‘காக்கி’ படத்தின் உரிமைகளை வாங்கியுள்ளது.
விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா, சன் டீவி புகழ் கதிர், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘காக்கி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கி, சுமார் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அவ்கத் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுத, கனல் கண்ணன் மற்றும் ஷியாம் ஆக்ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.
ஜனரஞ்சகமான குடும்ப பாங்கான ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் எடிட் செய்யப்பட்ட சில பகுதிகளை பார்த்த இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனத்தார், கதையின் ஆழத்தையும், தகுதிகளையும் புரிந்துக் கொண்டு படத்தை வாங்க முடிவு செய்திருக்கிறார்கள்.
வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம், படத்தின் விளம்பரத்தை வித்தியாசமாகவும், மிகப்பெரிய அளவிலும் செய்ய திட்டமிட்டுள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்திருப்பதோடு, அக்டோபர் மாதம் டீசர் மற்றும் டிலரையும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.