Sep 16, 2019 07:17 PM

முதலமைச்சரை இழிவுப்படுத்திய விஜயின் தந்தை எஸ்.ஏ.சி!

முதலமைச்சரை இழிவுப்படுத்திய விஜயின் தந்தை எஸ்.ஏ.சி!

நடிகர் விஜயின் ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி குறித்து பேசப்பட்ட வசனங்களால் பெரும் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, விஜய்க்கு பா.ஜ.க பிரமுகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்கள் வழங்குவதை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இதற்கும் அதிமுக பிரமுகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கும் தொடரப்பட்டது.

 

இந்த நிலையில், விஜய் தற்போது நடித்து வரும் ‘பிகில்’ படம் தீபாவளியக்கு வெளியாக உள்ள நிலையில், அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முதலமைச்சர் எடப்பாடி இழிவுப்படுத்துவதாக, பிரபல இயக்குநரும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி குற்றம் சாட்டியுள்ளார்.

 

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் தனது 70 வது படத்திற்கு ‘கேப்மாரி என்கிற CM' என்று தலைப்பு வைத்திருக்கிறார். இப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார்.

 

இப்படத்தின் தலைப்பு மூலம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இழிவுப்படுத்துவதாக செல்வமணி இன்று பத்திரிகையாளர்களிடம் கவலை தெரிவித்திருக்கிறார்.

 

RK Selvamani

 

புரட்ச்சித்தலைவி அம்மா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்காக ரூ.1 கோடி நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெப்ஸிக்கு நேற்று வழங்கினார். இதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எளிதில் பார்க்க கூடிய முதலமைச்சராக இருக்கிறார். அவர் திரையுலகிற்கு பல நல்ல விஷயங்களை செய்ய தயாராக இருக்கிறார். அவரை தனது படம் மூலம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இழிவுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று கூறியிருக்கிறார்.

 

செல்வமணியின் இந்த புகாரால் அதிமுக தொண்டர்கள் கோபடைந்ததோடு, ‘கேப்மாரி என்கிற CM’ படம் வெளியாகும் போது தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.