Jul 02, 2019 12:11 PM

இதிலும் விஜய் தான் முதலிடம்! - ரஜினி, அஜித்துக்கு எந்த இடம் தெரியுமா?

இதிலும் விஜய் தான் முதலிடம்! - ரஜினி, அஜித்துக்கு எந்த இடம் தெரியுமா?

விஜயின் 63 வது படமான ‘பிகில்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதில் விஜயின் இளமை தோற்றமும், வயதான தோற்றமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. அதிலும், இந்த வயதிலும் விஜய் தனது இளமையை எப்படி மெயிண்டெய்ன் பண்ணுகிறார், என்பதை தெரிந்துக்கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

 

தீபாவளியன்று ‘பிகில்’ படம் வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு கொண்டாட்டம் தான். ஏற்கனவே தொடர்ந்து தீபாவளிக்கு ஹிட் படங்களை கொடுத்து வருதால், பிகில் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், விஜய் ரசிகர்கள் கொண்டாட தீபாவளி வரை காத்திருக்க தேவையில்லை, இப்போதே அவர்கள் கொண்டாடுவதற்கான காரணம் கிடைத்துவிட்டது.

 

ஆம், விக்கிபீடியாவில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்களின் பக்கங்களில் விஜய் தான் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.

 

ரஜினிகாந்த் இரண்டாவது இடத்திலும், அஜித் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்கள்.

 

இந்த தகவல் வெளியாகியதில் இருந்து விஜய் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள். படங்களின் வசூல் உள்ளிட்ட அனைத்திலும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் விஜய், சமூக வலைதள செயல்பாடுகளிலும் முதல் இடத்தில் இருப்பதால், அவரை ”விஜய் எப்போதும் கிங்” என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.