Aug 05, 2018 07:36 PM

அமெரிக்கா புறப்பட்ட விஜய்! - எதற்கு தெரியுமா?

அமெரிக்கா புறப்பட்ட விஜய்! - எதற்கு தெரியுமா?

விஜயின் 62 வது படமாக உருவாகி வரும் ‘சர்கார்’ படத்திற்கு எதிராக சில தடைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் படக்குழு பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. விஜய், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் என ஒட்டு மொத்த படக்குழுவும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டது போல இடைவிடாமல் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்கள்.

 

இந்த நிலையில், சென்னையில் நடத்தப்பட்டு வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் உள்ளிட்ட சர்கார் குழு இன்று அமெரிக்கா புறப்பட்டார்கள். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் 6 ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்கி 11 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளை அங்கு படமாக்க முடிவு செய்துள்ளனர்.