Feb 01, 2019 02:08 PM

மகள் செய்த சாதனை! - சந்தோஷத்தில் விஜய்

மகள் செய்த சாதனை! - சந்தோஷத்தில் விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய், தான் நடிக்கும் படங்களில் சமூக விழிப்புணர்வு கருத்துக்களை பேசுவதோடு, தற்போதைய அரசியல் குறித்து பேசுவதோடு, அதற்கு எதிராக விமர்சனமும் செய்து வருகிறார். இதனால், அவரது படங்கள் சர்ச்சைகளில் சிக்கினாலும், பெரிய வெற்றியும் பெற்று வருகிறது.

 

இதற்கிடையே, விஜய் வழியில் அவரது மகன் சஞ்சயும் சினிமா மீது ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் இயக்கி நடித்த குறும்படம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், விரைவில் சஞ்சய் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாக இருப்பதாகவும், அவரை முன்னாணி இயக்குநர் ஒருவர் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மகனின் விருப்பத்தை சந்தோஷமாக நிறைவேற்றியிருக்கும் விஜய், தற்போது தனது மகள் சாஷாவாலும் பெரும் சந்தோஷமடைந்திருக்கிறார்.

 

ஆம், விஜயின் மகன் எப்படி சினிமா மீது ஆர்வமாக உள்ளாரோ அதுபோல மகள் விளையாட்டின் மீது ஆர்வமாக உள்ளார். விஜயின் மகள் சாஷா, பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதோடு, பல பரிசுகளையும் வென்றிருக்கிறார்.

 

இந்த நிலையில், சாஷா பங்கு பெற்றிருக்கும் பேட்மிண்டன் குழு சமீபத்திய முக்கியமான போட்டில் ஒன்றில் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது. 

 

இந்த தகவலை சாஷாவின் பள்ளி நிர்வாகமே தங்களது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்க, இதைப் பார்த்த விஜய் சந்தோஷமடைந்திருக்கிறாராம்.

 

Vijay daughter Sasha

 

Vijay daughter Sasha