Oct 31, 2019 04:22 AM
விஜயின் 65 வது படத்தை இயக்கப் போவது இவர் தான்!

விஜயின் ‘பிகில்’ கடந்த 25 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், மிகப்பெரிய வசூலை ஈட்டி வருகிறது. இதற்கிடையே விஜய் தனது 64 வது படத்தின் படப்பிடிப்பில் விரைவில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில், விஜயின் 65 வது படம் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. விஜய் தனது 65 வது படத்திற்காக மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைய உள்ளாராம்.
ஏற்கனவே, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என விஜய் - முருகதாஸ் கூட்டணி ஹாட்ரிக் வெற்றிக் கொடுத்திருக்கும் நிலையில், தற்போது நான்காவது முறையாக இணைய உள்ளார்கள்.