பட்டாசு தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம்!

கொரோனாவால் பாதித்திருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், பெப்ஸி அமைப்பு நன்கொடை வழங்கிய நடிகர் விஜய், பிரதமர் நிவாரண நிதி மற்றும் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கும் நன்கொடை வழங்கினார்.
மேலும், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகம் மற்றும் பாண்டிச்சேரி, என தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கும் விஜய் நன்கொடை வழங்கியதோடு, தனது மக்கள் இயக்கம் மூலம், மாவட்டம் ரீதியாக வறுமையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், சிவகாசி அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வசிக்கும் பட்டாசு தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதை அறிந்த, விருதுநகர் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணியினர், 10 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், அரிசி மற்றும் மளிகை பொருட்களை, தலைவர் மாரிசெல்வம் தலைமையில் வழங்கியுள்ளார்கள்.