Jun 07, 2019 05:32 AM

விஜய் மேனேஜரின் அதிரடி அவதாரம்! - அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

விஜய் மேனேஜரின் அதிரடி அவதாரம்! - அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

அட்லீ இயக்கத்தில் விகய் நடித்து வரும் அவரது 63 வது படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் ஜூன் 22 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், விஜயின் 64 வது படம் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த விஜய், ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் சொல்லிய கதையை ஓகே சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மேலும் சில இயக்குநர்கள் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது யோகேஷ் கனகராஜ் தான் விஜயின் 64 வது படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

 

மேலும், இப்படத்தை விஜயின் உறவினரும், தொழிலதிபருமான சேவியர் பிரிட்டோவும், வேல்ஸ் பல்கலைக்கழக தலைவருமான ஐசரி கே.கணேஷும் இணைந்து தயாரிப்பதாக இருந்த நிலையில், தற்போது சேவியர் பிரிட்டோ மட்டுமே தனியாக தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Vijay and Xavier Britto

 

அத்துடன், விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் இப்படத்தில் லைன் புரொடியூஸராக அவதாரம் எடுத்திருக்கிறாராம். ஜி.வி.பிரகாஷின் உதவியாளராக இருந்த ஜெகதீஷ், ‘தலைவா’ படப்பிடிப்பின் போது விஜயின் அறிமுகம் கிடைத்து, பிறகு விஜயின் ட்வீட்டர் பக்கத்தை பராமரிக்கும் பணியை செய்து வந்தவர், தற்போது விஜயின் மேனேஜர் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

 

Jagadish

 

இந்த நிலையில், விஜய் படத்திற்கு லைன் புரொடியூஸராக ஜெகதீஷ் பணியாற்ற இருப்பது பல தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. காரணம், இந்த குறுகிய காலத்தில் விஜய்க்கு மேனேஜரானதோடு, அவரது படத்திற்கே தயாரிப்பாளராகியிருப்பது தான்.

 

இதற்கு முன் விஜயின் மேனேஜராக இருவந்தவர், பல ஆண்டுகளுக்கு பிறகே விஜய் படத்தின் தயாரிப்பாளராக உயர்ந்த நிலையில், ஜெகதீஷின் இந்த அசுர வளர்ச்சி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. குறிப்பாக விஜயின் கால்ஷீட் கிடைக்காதா, என்று ஏங்கும் தயாரிப்பாளர்களுக்கு.

 

Vijay and Jagadish

 

விஜய்க்கு மட்டும் இன்றி நடிகர் கதிர், நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கும் ஜெகதீஷ் மேனேஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Jagadish and Samantha, Keerthy Suresh