Sep 05, 2019 05:53 AM

மு.க.ஸ்டாலினை சந்தித்த விஜய்! - அதிமுக அமைச்சரின் அதிரடி கருத்து

மு.க.ஸ்டாலினை சந்தித்த விஜய்! - அதிமுக அமைச்சரின் அதிரடி கருத்து

நடிகர் விஜய் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும், அவ்வபோது தனது அரசியல் ஆர்வத்தையும் வெளிப்படுத்த தவறியதில்லை. அவரது விஜய் மக்கள் இயக்கம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவதோடு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தனது ஆதரவை தெரிவித்தும், அது குறித்து கருத்து தெரிவித்தும் வருகிறார்.

 

ஆனால், இதுவரை விஜய் வெளிப்படையாக தான் அரசியலில் ஈடுபடப்போகிறேன், என்று சொன்னதில்லை. இருந்தாலும், அவர் அரசியலில் நுழைவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை செய்து வருகிறார் என்றும், அதற்காகவே தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற விஜய், அங்கு வந்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சில நிமிடங்கள் பேசியிருக்கிறார். ஸ்டாலின், விஜய் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், விஜய் திமுக-வில் இணைய போவதாகவும், அவர் விரைவில் நேரடி அரசியலில் ஈபடப்போவதாகவும் சமூக வலைதளங்களில் பலர் தகவல் பரப்பி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், விஜயின் அரசியல் எண்ட்ரி மற்றும் அவர் திமுக-வுடன் சேருவது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “விஜய் அரசியலுக்கு வந்தாலும் சரி, அவர் திமுக-வுடன் கூட்டணி வைத்தாலும் சரி, அதிமுக-வுக்கு எந்த ஆபத்தும் வராது. வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக தான் ஆட்சியை கைப்பற்றும், என்று தெரிவித்துள்ளார்.

 

Minister Jayakumar