Jan 07, 2020 05:11 AM

’மாஸ்டர்’ படத்திற்காக விஜய் போட்ட புது கெட்டப்! - இதோ புகைப்படம்

’மாஸ்டர்’ படத்திற்காக விஜய் போட்ட புது கெட்டப்! - இதோ புகைப்படம்

விஜயின் ‘மாஸ்டர்’ படம் பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கிறது. தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி காமினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்கள் தொடரும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே, ‘மாஸ்டர்’ படத்திற்காக விஜய் மீசை இல்லாத ஒரு கெட்டப்பில் நடிக்கிறாராம். இது பற்றி இயக்குநர் கூறி விஜயிடம் மீசையை எடுக்க வேண்டும், என்று கூறியபோது விஜய் ரொம்பவே யோசித்திருக்கிறார். மீசை எடுத்தால் நன்றாக இருக்காது, என்றும் கூறியிருக்கிறார். ஆனால், அவரது மனைவி சங்கீதா தான், அதெல்லாம் யோசிக்காதீங்க, நல்லா தான் இருக்கும், என்று தைரியம் கொடுத்த பிறகே விஜய் மீசையை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், விஜய் மீசை இல்லாத புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை.

 

அதே சமயம், மாஸ்டர் படத்தில் முறுக்கு மீசையோடு மற்றொரு கெட்டப்பிலும் விஜய் வருகிறார். இது பற்றி எந்த தகவலும் வெளியாக நிலையில், தற்போது அந்த புகைப்படமே வெளியாகியிருக்கிறது.

 

விஜய் தான் தங்கியிருக்கும் ஓட்டலில் இருந்து படப்பிடிப்புக்கு செல்லும் போது ரசிகர் ஒருவர், தனது செல்போனில் எடுத்திருக்கும் இந்த முறுக்கை மீசை புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Vijay New Getup