Jul 12, 2019 01:03 PM

நடந்து முடிந்த விஜயின் இரண்டாவது திருமணம்! - அமலா பால் என்ன செய்தார் தெரியுமா?

நடந்து முடிந்த விஜயின் இரண்டாவது திருமணம்! - அமலா பால் என்ன செய்தார் தெரியுமா?

இயக்குநர் விஜயும், நடிகை அமலா பாலும், குறுகிய காலத்தில் காதலித்து, குறுகிய காலத்தில் திருமணம் செய்துக் கொண்டது போலவே, குறுகிய காலத்திலேயே தங்களது மண வாழ்க்கையை முறித்துக் கொண்டு விவாகரத்து பெற்றுவிட்டனர்.

 

திருமணத்திற்குப் பிறகு எங்கேயும் சந்தித்துக் கொள்ளாத இவர்கள், அவர் அவர் வேலையில் பிஸியாக வலம் வந்த நிலையில், இயக்குநர் விஜய் இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். சென்னையை சேர்ந்த டாக்டரான ஐஸ்வர்யா என்பவருக்கும், இயக்குநர் விஜய்க்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

 

விஜயின் இரண்டாவது திருமணம் குறித்த செய்தி வெளியானதில் இருந்த பெரும் வருத்தத்திற்கு ஆளான மலா பால், ஒரு பெண் செய்யகூடாதவைகளை எல்லாம் செய்ததாக தகவல் வெளியாகி வருகிறது.

 

இந்த நிலையில், நேற்று விஜயின் இரண்டாவது திருமணம் நடைபெறும் போது, நடிகை அமலா பால், தனது ஆடை படம் குறித்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். பொதுவாக தான் நடிக்கும் பட பற்றிய தகவலை எப்போதாவது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுபவர், நேற்று மட்டும் தொடர்ந்து தனது ஆடை படம் பற்றிய தகவல்களை பதிவிட்டுக் கொண்டிருந்தார்.

 

காரணம், விஜயின் இரண்டாவது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து அமலா பாலிடம் கருத்து கேட்டதால், அவர் சற்று கோபமாகி, தனது ஆடை படம் பற்றிய தகவல்களை வெளியிட்டு வந்தாராம்.