Aug 28, 2019 04:06 AM
விஜயின் வெற்றி படத்தின் இரண்டாம் பாகம்! - இயக்குநர் திட்டம்

மாஸ் ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் விஜய், ஆரம்பகாலத்தில் காதல் பிளஸ் ஆக்ஷன் படங்களில் நடித்து வந்ததோடு, மென்மையான வேடங்களிலும் நடித்து வந்தார். அப்படி அவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களை, குறிப்பாக ஒன்சைடாக காதலிக்கும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த படம் ‘லவ் டுடே’.
கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்கிய பாலசேகரன், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.
ஆனால், விஜய் தற்போது இருக்கும் பிஸியில் அவரை வைத்து ‘லவ் டுடே 2’ எடுப்பது சாத்தியமில்லாதது என்பதால் அறிமுக நடிகரை ஹீரோவாக்க பாலசேகரன் முடிவு செய்திருக்கிறாராம்.