Jan 07, 2020 05:41 AM

விஜய் சேதுபதியின் பிறந்தநாள்! - உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள்

விஜய் சேதுபதியின் பிறந்தநாள்! - உடல் உறுப்பு தானம் செய்த ரசிகர்கள்

விஜய் சேதுபதியின் ரசிகர்கள் விவசாயிகளுக்கு உதவி செய்வது, பனை விதை நடுவது உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி விஜய் சேதுபதி ரசிகர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்கள்.

 

திருச்சி விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரிடம் உடல் உறுப்பு தானம் செய்ததற்காக சான்றிதழ்களை 202 ரசிகர்கள் சமர்ப்பித்தார்கள்.

 

ஒரே நாளில் 200 பேர் உடல் உறுப்பு தானம் செய்தது இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 1338 ஆக உயர்வடைந்துள்ளது.