Jul 17, 2018 02:48 PM

சிவாஜி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

சிவாஜி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, நடிப்பதில் மட்டும் இன்றி கதை தேர்விலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜுங்கா’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், அவரது 25 வது படமான ‘சீதக்காதி’ படத்தில் அவர் 80 வயது முதியவர் வேடத்தில் நடிக்கிறார்.

 

இப்படத்தின் முதல் பார்வையான ‘மேக்கிங் ஆப் ஐயா’ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், இப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியிறுக்கிறது.

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்ற லெஜண்ட் நடிகர்கள் நடிக்க வேண்டிய கதையம்சம் கொண்ட இந்த படத்தில் முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்கவே இயக்குநர் பாலாஜி தரணிதரன் நினைத்துள்ளார். ஆனால், அப்படிப்பட்ட நடிகர்களை தன்னால் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், விஜய் சேதுபதியை இப்படத்தின் ஹீரோவாவாக்கியுள்ளார். அவரது எண்ணத்திற்கு ஏற்ப தனது வேலையை சரியாக செய்திருப்பதாக தான் நினைக்கிறேன், என்று கூறியிருக்கும் விஜய் சேதுபதி, ’சீதக்காதி’ ஒரு ஆத்மார்த்தமான படம், அது கலைக்கு முடிவே இல்லை, சாகாவரம் பெற்றது, என்ற செய்தியை சொல்லும். அ து யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். என் 25 வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.

 

Seethakaathi

 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் இணைந்த பாலாஜி தரணிதரன் - விஜய் சேதுபதி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் இந்த ‘சீதக்காதி’ இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஒரு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

கோவிந்த் மேனன்  இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.