Dec 31, 2019 10:32 AM

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி!

விஜயின் 64 வது படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, ‘லாபம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட சுமார் 10 படங்களில் நடித்து வருவதோடு, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தை தொடர்ந்து ரஜினியின் 168 வது படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ், அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் டிராப்பான படத்தை டேக் ஓவர் செய்வதோடு, ராகவா லாரன்ஸை வைத்து மூன்று படங்கள் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், விஜய் சேதுபதியை வைத்தும் ஒரு படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறதாம். இந்த படத்தை பொன்ராம் இயக்க இருக்கிறாராம். கிராமத்து பின்னணியில் உருவாக உள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாம்.