மனநலம் பாதித்தவராக நடிக்கும் விஜய் சேதுபதி! - வைரலாகும் புது கெட்டப்

வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் விஜய் சேதுபதிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். எதார்த்தமான நடிப்பு மட்டும் இன்றி இயல்பான காமெடி மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வரும் விஜய் சேதுபதி, தெலுங்குப் படம் ஒன்றில் வில்லனாக நடிப்பதோடு, ஹீரோயினின் தந்தையாகவும் நடிக்கிறார்.
இப்படி நடிப்பில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் விஜய் சேதுபதி நடிப்பில்’கடைசி விவசாயி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். ‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் இயக்கும் இப்படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகியுள்ளது.
விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசும் இப்படத்தில் விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக விஜய் சேதுபதி போட்டிருக்கும் புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,