May 07, 2019 05:56 PM

விஜய் சேதுபதியின் புது படத்தின் தலைப்பு ‘சங்கத்தமிழன்’!

விஜய் சேதுபதியின் புது படத்தின் தலைப்பு ‘சங்கத்தமிழன்’!

’96’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து வரும் பல படங்களில் விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கும் படமும் ஒன்று. 

 

எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் தயாரித்த பழம்பெறும் தயாரிப்பு நிறுவனமான பி.நாகி ரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்படி, படத்திற்கு ‘சங்கத்தமிழன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

 

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீமன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

விவேக்-மெர்வின் இசையகைக்கும் இப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, எம்.பிரபாகரன் கலையை நிர்மாணிக்கிறார். அனல் அரசு ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.