ஹாலிவுட் கலைஞரை கோலிவுட்டுக்கு அழைத்து வரும் விஜய் சேதுபதி!
                மூன்று முறை ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் மேக்கப் மேன் கிரேக் கேனானை கோலிவுட்டுக்கு அழைத்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, இனி தனது படங்களை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு வருகிறார். அதன்படி கோகுல் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘ஜுங்கா’ படத்தை ரூ.20 கோடி பட்ஜெட்டில் அவரே தயாரித்து நடிக்கிறார்.
இதையடுத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அப்படத்திற்கு பிறகு பாலாஜி தரணிதரனின் ‘சீதக்காதி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக தான், மூன்று முறை ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் மேக்கப் மேன் கிரேக் கேனானை கோலிவுட்டுக்கு அழைத்து வருகிறார்.
'Mrs. Doubtfire', 'The Curious Case of Benjamin Button' மற்றும் 'Dracula' என மூன்று படங்களுக்காக சிறந்த ஒப்பனை கலைஞராக ஆஸ்கார் விருது பெற்றுள்ள கிரேக் கேனான், விஜய் சேதுபதிக்கு மேக்கப் போடுவதற்காக விரைவில் சென்னைக்கு வர உள்ளார்.
மேலும், பாகுபலி இரண்டு பாகங்களிலும் பணியாற்றிய விஸ்வநாத் சுந்தரம் தான், இப்படத்தில் விஜய் சேதுபதியின் 75 வயது மேடை கலைஞர் கெட்டப் எப்படி இருக்க வேண்டும், என்று வரைந்து கொடுத்துள்ளாராம்.

