மம்முட்டி, மோகன்லாலை விட விஜய் தான் கேரளாவில் மாஸ்! - சொன்னது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய்க்கு தமிழக மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும், கேரளாவில் எந்த ஒரு தமிழ் நடிகர்களுக்கும் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
விஜயின் ஒவ்வொரு படமும் நேரடியாக கேரளாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்று வருகிறது. இதனால், விஜய் படம் வெளியாகும் போது, மலையாள முன்னணி ஹீரோக்களே தங்களது படங்களில் ரிலீஸை தள்ளி வைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில், கேரளாவில் மம்மூட்டி மற்றும் மோகன்லாலை விட விஜய்க்கு தான் அதிகம் ரசிகர்கள் உள்ளார்கள் என்று அம்மாநில எம்.எல்.ஏ பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள எம்.எல்.ஏ ஜார்ஜ் என்பவர், தொலைக்காட்சி விவாதம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, ”கேரளாவில் தமிழ் நடிகர் விஜய் படம் ரிலிஸாகும் போது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். இங்கு, மம்மூட்டி மற்றும் மோகன்லாலை விட விஜய்க்கு தான் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
ஜார்ஜ்ஜின் இத்தகைய கருத்து விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினாலும், மம்மூட்டி மற்றும் மோகன்லால் ரசிகர்களை கடுப்படிக்க வைத்திருக்கிறது. இதனால், எம்.எல்.ஏ ஜார்ஜ்ஜை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.