விஜயகாந்துக்கு மருமகளாகும் வெள்ளைக்கார பெண்! - வைரலாகும் போட்டோ

விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன், அவரது கலை வாரிசாக சினிமாவில் நடித்து வருகிறார். ‘சகாப்தம்’ படத்தின் மூலம் ஹீரோவான சண்முகபாண்டியன் அதை தொடர்ந்து ‘மதுர வீரன்’ படத்தில் நடித்தார். தற்போது உடல் எடையை குறைப்பதற்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில், சண்முகபாண்டியன் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும், அதில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய....” என்றும் அவர் பதிவிட்டு ஸ்மைலி போட்டுள்ளார்.
அந்த பெண் குறித்து எந்த பெயரும், அவர் யார் என்றும் கூறாத சண்முகபாண்டியன், தனது பதிவின் மூலம் எதையோ சூசகமாக சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரிகிறது, என்று அந்த போட்டவை பார்த்த நெட்டிசன்கள் கருதியதோடு மட்டும் அல்லாமல், ”இவர் தான் கேப்டன் விஜயகாந்தின் மருமகளா?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.