Jul 15, 2019 02:22 PM

இந்திய சினிமாவின் முக்கிய திரைப்படத்தில் இணைந்த விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான்!

இந்திய சினிமாவின் முக்கிய திரைப்படத்தில் இணைந்த விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான்!

வித்தியாசமான கதைக்களங்களில் நடிப்பதோடு கதாபாத்திரத்திற்காக வருத்திக் கொள்வதிலும் முதல் நபராக திகழ்பவர் நடிகர் விக்ரம். மக்களிடம் அவரை அடையாளம் காட்டிய ‘சேது’ முதல் விரைவில் வெளியாக உள்ள ‘கடாரம் கொண்டான்’ வரை கதாபாத்திரங்களில் வித்தியாசத்தை காட்டி வரும் விக்ரம், ’இமைக்கா நொடிகள்’ இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிப்பது அனைவரும் அறிந்த செய்தி தான் என்றாலும், அப்படம் குறித்து அறியாத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

Viacom 18 Studios மற்றும் 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் உருவாகிறது. அதுமட்டும் அல்ல இந்திய சினிமாவின் முக்கிய திரைப்படமாக திகழும் வகையில் இப்படத்தை படமாக்க இருக்கிறார்கள். அதற்கான முதல் சான்று, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது தான்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘விக்ரம் 58’ என்று அழைக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் தகவலை சமீபத்தில் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

மேலும், படத்தின் ஹீரோயின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார், என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.

 

வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 2020 ஆம் ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.