Jun 04, 2019 06:37 AM

மகன் விஷயத்தில் விக்ரமின் புதிய அதிரடி!

மகன் விஷயத்தில் விக்ரமின் புதிய அதிரடி!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விக்ரம், தனது மகன் துருவை ஹீரோவாக களம் இறக்கியுள்ளார். விக்ரம் பலவித போராட்டங்களுக்குப் பிறகு ஹீரோவாக வெற்றிப் பெற்ற நிலையில், அவரது மகன் துருவ் அத்தகைய போராட்டங்களை எதிர்கொள்ளாமல் ஹீரோவானாலும், தற்போது சில போராட்டங்களை அவரும் எதிர்கொண்டு வருகிறார்.

 

துருவின் முதல் படமான ‘வர்மா’ படத்தை பாலா இயக்கி முடித்த நிலையில், அப்படத்தை குப்பை என்று கூறி தயாரிப்பாளர்கள் நிராகரித்ததோடு, முதலில் இருந்து அப்படத்தை வேறு ஒரு இயக்குநரை வைத்து எடுத்தும் முடித்துவிட்டார்கள். ’ஆதித்ய வர்மா’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

Adithya Varma

 

இந்த நிலையில், ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மீது நம்பிக்கை இழந்த விக்ரம், அப்படம் வெளியாவதற்கு முன்பாக தனது மகன் துருவை வேறு ஒரு படத்தில் களம் இறக்க உள்ளார். இப்படத்தை தொடர் தோல்விப் படங்களை கொடுத்து வரும் விஜய் இயக்கப் போவதுதான் மற்றொரு சோகமான தகவல்.

 

விஜய் ஏற்கனவே துருவுக்காக ஒரு கதை சொல்ல, அந்த கதை விக்ரமுக்கும் பிடித்துவிட்டதாம். ஆனால், பாலாவின் இயக்கத்தில் தனது மகன் அறிமுகமாக வேண்டும் என்று விக்ரம் ஆசைப்பட்டதால் விஜயை காத்திருப்பு லிஸ்ட்டில் வைத்தாராம். தற்போது பாலாவின் படத்தில் மகன் அறிமுகமாகததால், விஜய் சொன்ன கதையில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.