Mar 09, 2019 08:44 AM

கமல் படத்தில் பாட்டு பாடிய விக்ரம்!

கமல் படத்தில் பாட்டு பாடிய விக்ரம்!

மகன் துருவை ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விக்ரம், அப்படியே தானும் தொடர்ந்து ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டநேஷ்னல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து  தயாரிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும், நாசரின் மகன் அபி ஹாசனும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

‘தூங்கா வனம்’ படத்தை இயக்கிய எம்.செல்வா இயக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

 

இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெறும் “தீச்சுடன் குனியுமா? தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா? எரிவா மேலே மேலே...”என்று தொடங்கும் பாடலை விக்ரம் பாடியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை விவேகா எழுதியுள்ளார்.

 

Kadaram Kondan

 

இது குறித்து கூறிய இசையமைப்பாளர் ஜிப்ரான், “கடாரம் கொண்டான் படத்திற்காக விக்ரம் சார் பாடிய பாடல் புத்துணர்ச்சி தருவதாக, ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக, உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது மகிழ்ச்சி. நிச்சயம் இந்தப் பாடல் தினமும் நமக்கு உற்சாகம் ஊட்டும் பாடலாக அமையும் என நம்புகிறேன்.” என்றார்.