May 15, 2020 08:21 AM

சத்தமில்லாமல் உதவி செய்யும் விஷால்!

சத்தமில்லாமல் உதவி செய்யும் விஷால்!

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் விஷால், ‘துப்பறிவாளன் 2’ படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.

 

இந்த நிலையில், கொரோனாவினால் வாழ்வாதரத்தை இழந்து கஷ்ட்டப்படும் ஏழைகள் மற்றும் நலிந்த நடிகர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களுக்கு விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலம் சத்தமில்லாமல் நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார்.

 

அதன்படி, தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், சினிமா தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை விஷால் வழங்கி வருகிறார்.

 

Vishal FansClub

 

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாம்களில் இருக்கும் 300 குடும்பங்களுக்கு சமீபத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கிய விஷால், தான் தத்தெடுத்த தஞ்சாவூர் மாவட்டம், கார்கவயல் கிராம மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கினார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வரும் விஷால், இதுவரை 5000 பேருக்கு மேல் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார்.

 

இந்த பணிகளை, விஷாலின் தேவி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும், விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளருமான ஹரிகிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார்.