May 16, 2019 04:10 AM

வரலட்சுமியை பயன்படுத்திவிட்டு கழற்றிவிட்டவர் விஷால்! - பிரபல நடிகர் பகிரங்க குற்றச்சாட்டு

வரலட்சுமியை பயன்படுத்திவிட்டு கழற்றிவிட்டவர் விஷால்! - பிரபல நடிகர் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷால், தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் ஆகியவற்றில் முக்கிய பொருப்புகளில் இருக்கும் விஷாலுக்கு, ஆரம்பத்தில் ஆதரவு தெரிவித்த பலர் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

 

விரைவில் வர இருக்கும் நடிகர்கள் சங்க தேர்தலில் விஷாலை எதிர்த்து பலர் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், பிரபல நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், விஷால் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

இதில் கலந்துக் கொண்ட ஆர்.கே.சுரேஷிடம், நடிகர் சங்கம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட போது, “நாசர் தலைமையில் தேர்தலில் நிற்கும் அனைவருக்கும் ஆதரவாக செயல்படுவேன். ஆனால், விஷால் நின்றால் அவருக்கு எதிராக செயல்படுவேன். அதேபோல், விஷாலை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுபவர்களு உறுதுணையாக இருப்பேன்.

 

எனக்கும் விஷாலுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர் என் ‘பில்லா பாண்டி’ படத்தை பார்க்காமல் விமசித்ததை கூட நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நடிகர்கள் சங்கத்தில் நாடக கலைஞர்களை ஒருங்கிணைத்ததில் ஜே.கே.ரித்தீஷின் மிகப்பெரிய பணி இருக்கிறது. ஆனால், அவரையே விஷால் தூக்கி எறிந்துவிட்டார். இது விஷாலுக்கு புதிதல்ல, அவரது மேனஜர், நடிகர் உதயா என்று அனைவரையும் அவர் தூக்கி எறிந்தவர் தானே, ஏன் நடிகை வரலட்சுமியை கூட. இதை நான் ஒரு நண்பர் என்ற முறையில் தான் சொல்கிறேன், நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்.

 

Actor RK Suresh

 

எனவே, விஷாலை எதிர்த்து நிற்பவர்களுக்கு நான் ஆதரவு அளிப்பேன். விஷால் நடித்தால் போதும், அவருக்கு எதற்கு சங்கம், கார்த்தி தலைமையில் நின்றால், நான் கார்த்திக்கு ஆதரவு அளிப்பேன். விஷால் மட்டும் தேர்தலில் நிற்க கூடாது. விஷால் அல்லாத தலைமை என்றால் நாசர் தலைமைக்கும் ஆதரவு அளிப்பேன். மொத்தத்தில், அண்ணன் ஜே.கே.ரித்தீஷின் கனவை நிறைவேற்ற பாடுபடுவோம்.” என்றார்.