ஆன்மீகத்திற்கு தாவும் விஷால்!

அதிரடி ஆகஷன் படங்களில் நடித்து வந்த விஷால், நிஜ வாழ்க்கையில் சில அதிரடி சம்பவங்களை எதிரிக்கொண்டு வருபவர், திடீரென்று ஆன்மீகத்திற்கு தாவியிருக்கிறார்.
ஆம், விஷால் ஆன்மீக கதை ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார். பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் எழுதிய ஆன்மீக நாவலை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தை சமுத்திரக்கனி இயக்குகிறார்.
இந்திரா செளந்தரராஜன் எழுதிய ‘சிவம்’ என்ற நாவலை படித்த சமுத்திரக்கனி, இதற்கு விஷால் சரியாக இருப்பார் என்று எண்ணி, அவரிடம் கதையை சொல்ல அவருக்கும் பிடித்துவிட்டதாம். உடனே, சிவம் நாவலை படமாக்கும் உரிமையை பெற்ற விஷால், நடிக்கவும் ஓகே சொல்லியிருக்கிறார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கும் ‘நாடோடிகள் 2’ விரைவில் வெளியாக உள்ளது. மேலும், சில படங்களில் நடித்து வரும் சமுத்திரக்கனி, அப்பட வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, விஷால் படத்தை தொடங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.