Aug 22, 2019 07:18 PM

நடிகர் விஷால் திருமணம் நின்றுவிட்டதா? - கோலிவுட்டில் பரவும் அதிர்ச்சி தகவல்

நடிகர் விஷால் திருமணம் நின்றுவிட்டதா? - கோலிவுட்டில் பரவும் அதிர்ச்சி தகவல்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்த விஷால், நடிகர் சங்கத்தின் கட்டிடம் முடித்த பிறகே திருமணம் செய்துக்கொள்வேன் என்று அறிவித்திருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா அல்லா என்பவருடன் அவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

 

விஷால் - அனிஷா திருமணம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விஷால் திருமணம் நின்றுவிட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.

 

மேலும், அனிஷா அல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த விஷால் சம்மந்தமான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

ஆனால், இது குறித்து விஷால் தரப்பில் இருந்தோ அல்லது அனிஷா தரப்பில் இருந்தோ எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. அதே சமயம், இந்த தகவலை அவர்கள் இதுவரை மறுக்கவும் இல்லை.