Aug 25, 2019 07:55 AM

நின்று போன விஷால் திருமணம்! - காரணம் இந்த நடிகையா?

நின்று போன விஷால் திருமணம்! - காரணம் இந்த நடிகையா?

விஷாலுக்கும், ஆந்திர தொழிலதிபரின் மகளும், நடிகையுமான அனிஷா அல்லா ரெட்டிக்கும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெறும் முதல் திருமணம் என்பதால், தமிழ் சினிமாவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

 

இதற்கிடையே, விஷால் - அனிஷா திருமணம் நின்றுவிட்டதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகி அனைத்து ஊடகங்களில் செய்தியாகவும் வெளியாகிவிட்டது. அதை உறுதி செய்யும் வகையில், அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருந்த தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கிவிட்டார்.

 

இது குறித்த உண்மை நிலவரம் குறித்து விஷாலை தொடர்பு கொண்டால் அவரது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது நண்பர்களும் தலைமறைவாகிவிட்டார்கள். மொத்தத்தில், திருமணம் நின்று போனது குறித்து விஷால் மற்றும் அனிஷா தரப்பில் இருந்து எந்தவித விளக்கமோ அல்லது மறுப்பு தெரிவிக்கவில்லை. 

 

மேலும், திருமணம் நின்றதற்கு விஷால், அனிஷா இடையிலான கருத்து வேறுபாடு தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதுவும் ஒரு நடிகையால் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டு அது திருமணம் நிற்கும் அளவுக்கு போய்விட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.

 

விஷால் நடித்த கடைசிப்படத்தில் அவருடன் நடித்த அந்த நான்கு எழுத்து நடிகையும், விஷாலும் தனியாக அறையில் இருந்த தகவல் ஆதாரத்துடன் அனிஷாவுக்கு கிடைக்க, அதன் மூலம் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டி, இறுதியில் அனிஷா திருமணத்தை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.