Jul 04, 2019 10:51 AM

அறிமுகப்படுத்திய இயக்குநரை அசிங்கப்படுத்திய விஷால்!

அறிமுகப்படுத்திய இயக்குநரை அசிங்கப்படுத்திய விஷால்!

வாய்ப்புக் கொடுத்த இயக்குநர்களுக்கும், வளர்த்துவிட்ட இயக்குநர்களுக்கும் ஹீரோக்கள் விசுவாசமாக இருப்பது குதிரை கும்பு போன்றது தான். சில நடிகர்கள் இதில் விதிவிலக்காக இருந்து நன்றி மறவாமல் தங்களது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த இயக்குநர்களை மறக்காமல் இருக்கிறார்கள். ஆனால், பலர் அதை எளிதில் மறப்பது மட்டும் இன்றி, அவ்வபோது அவர்களை அசிங்கப்படுத்தவும் செய்கிறார்கள்.

 

அப்படி ஒரு விஷயத்தை தான் நடிகர் விஷால் செய்திருப்பதாக கூறி இயக்குநர் ஒருவர் தனது வருத்தத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

 

விஷாலின் அறிமுக படமான ‘செல்லமே’ படத்தை இயக்கியவர் காந்தி கிருஷ்ணா. ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், செல்லமே படம் மூலம் கொடுத்த வெற்றியால் தான் விஷால், என்ற நடிகர் இன்று தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வருகிறார்.

 

’செல்லமே’ படத்திற்கு பிறகு ‘ஆனந்த தாண்டவம்’ என்ற படத்தை காந்தி கிருஷ்ணா இயக்கினார். ஆனால், அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கிடையே விக்ரமை வைத்து அவர் எடுப்பதாக இருந்த ‘கரிகாலன்’ என்ற படமும் ஆரம்பத்தோடு நின்றுவிட்டது.

 

இந்த நிலையில், தான் அறிமுகப்படுத்திய விஷாலிடம் கதை சொல்ல இயக்குநர் காந்தி கிருஷ்ணா முயற்சித்திருக்கிறார். ஆனால், விஷாலோ அவரை சந்திக்க கூட நேரம் ஒதுக்காமல் அவரை அசிங்கப்படுத்தியுள்ளார்.

 

Director Gandhi Krishna

 

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ”விஷால் அறிமுகமான படம் ‘செல்லமே’. அதன் இயக்குநர் காந்தி கிருஷ்ணா நான். என்னிடம் கதை கேட்க நேரம் இல்லை. வாழ்க வளமுடன்” என்று இயக்குநர் காந்தி கிருஷ்ணா வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.

 

காந்தி கிருஷ்ணாவின் இந்த வருத்தமான பதிவை பார்த்த நெட்டிசன்கள் கமெண்டில் விஷாலை கிழி கிழி என்று கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள்.