Jun 14, 2019 09:48 AM

விஷால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! - கடும் கோபத்தில் வரலட்சுமி

விஷால் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! - கடும் கோபத்தில் வரலட்சுமி

நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமியும் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தாலும், அப்படம் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையே இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதற்கு இருவரும் மறுப்பும் ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக, பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துக் கொள்ள தொடங்கினார்கள்.

 

அதே போல், கடந்த முறை நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை எதிர்த்து போட்டியிட்ட விஷாலுக்கு வரலட்சுமி ஆதரவு தெரிவித்தார். இதனால், இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது.

 

ஆனால், விஷாலோ ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்பவரை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக அறிவித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

 

ஆனால், இது குறித்து எந்தவித கருத்தும் கூறாத வரலட்சுமி, எப்போதும் போல விஷாலுடன் நட்பாக பழகி வந்தார்.

 

இந்த நிலையில், விஷால் வெளியிட்ட வீடியோ ஒன்றால் அவர் மீது கடும்கோபமடைந்திருக்கும் வரலட்சுமி, விஷாலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

 

நடிகர் சங்கம் விஷயங்கள் குறித்து விஷால் ஒரு வீடியோ வெளியிட்டார், அதில் சரத்குமார் அவர்கள் பற்றி தவறான விஷயங்கள் கூறியுள்ளாராம்.

 

வீடியோவை பார்த்த வரலட்சுமி, எனது அப்பா இந்த முறை அந்த விஷயங்களில் இல்லை என்றாலும் அவரை தவறாக கூறியுள்ளீர்கள். நீங்கள் செய்த நல்லதை வெளிப்படுத்தாமல் தவறாக விமர்சனம் செய்கிறீர்கள். என்னுடைய ஓட்டை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என கோபமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி.