Dec 29, 2019 03:59 AM

’தளபதி 64’ வில்லன் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் என்ன தெரியுமா?

’தளபதி 64’ வில்லன் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் உருவாக உயர்ந்திருக்கும் விஜய் சேதுபதி, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சீதக்காதி’ போன்ற வித்தியாசமான படங்களில் நடிப்பதோடு, பிற மொழிப் படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே விஜயின் 64 வது படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் காட்சிகள் தற்போது கர்நாடக மாநிலத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

 

கல்வித்துறையில் நடக்கும் மோசடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் வேடம் என்னவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில், ‘தளபதி 64’ படத்தில் விஜய் சேதுபதி மோசமான அரசியல்வாதி கெட்டப்பில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.