Dec 31, 2019 05:18 AM

இந்த வருடம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்த ஹீரோக்கள் யார்? - இதோ பட்டியல்

இந்த வருடம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்த ஹீரோக்கள் யார்? - இதோ பட்டியல்

நாளை புதிய ஆண்டு பிறக்க உள்ளதால், இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் எழுச்சி குறித்து பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெற்றிப் பெற்ற படங்கள், தோல்வியடைந்த படங்கள் என்ற பட்டியல் வெளியாகி வருகின்றன. 

 

அதே சமயம், பல படங்கள் வெற்றிகரமாக ஓடினாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை. இதில் சில முன்னணி ஹீரோக்களின் படங்களும் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு தயாரிப்பாளர்களுக்கு அதிகம் லாபம் கொடுத்தது எந்த எந்த ஹீரோக்களின் படம் என்ற பட்டியலை நாம் வெளியிட்டிருக்கிறோம்.

 

இதோ அந்த பட்டியல்,

 

விஸ்வாசம்

எல் கே ஜி

கோமாளி

அசுரன்

நம்ம வீட்டு பிள்ளை

கைதி

தடம்

ஏ1

காஞ்சனா 3

 

ஆகிய படங்களில் சில எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும், தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை காட்டிலும் மிகப்பெரிய லாபத்தை வசூலித்திருக்கிறது.

 

உலகம் முழுவதிலும் அதிகமான வசூலித்த தமிழ்ப் படங்களின் பட்டியல் இதோ, (இது அதிகாரப்பூர்வமானது அல்ல, சில தகவல்களை வைத்து உருவாக்கியது)

 

பிகில்- ரூ 300 கோடி

பேட்ட- ரூ 220 கோடி

விஸ்வாசம்- ரூ 183 கோடி(சில பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் ரூ 200 கோடி என்றும் கூறி வருகின்றனர்)

காஞ்சனா3- ரூ 125 கோடி

கைதி- ரூ 106 கோடி

நேர்கொண்ட பார்வை- ரூ 105 கோடி

நம்ம வீட்டு பிள்ளை- ரூ 75 கோடி

காப்பான் - ரூ 71 கோடி

அசுரன் - ரூ 68 கோடி

என்ஜிகே- ரூ 60 கோடி

 

இந்த வருடத்தின் இறுதியில் வெளியான படங்கள் இந்த பட்டியல் இல்லாதற்கு காரணம், அவற்றின் சரியான வசூல் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம், தமிழ் சினிமாவுக்கு 2019 ஆம் ஆண்டு ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும் முடிவு பெரிய அளவில் லாபத்தைக் கொடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இருந்தாலும், ‘சில்லுக் கருப்பட்டி’ போன்ற தரமான படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திருக்கிறது.

 

மொத்தத்தில், 2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு லாபகரமான ஆண்டாகவே இருக்க, நாளை பிறகும் 2020 ஆம் ஆண்டு எப்படி இருக்கும், என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.