Sep 12, 2019 05:56 AM

’பிகில்’லுடன் ’கைதி’ மோதுவது ஏன்? - காரணம் சொன்ன இயக்குநர் லோகேஷ்

’பிகில்’லுடன் ’கைதி’ மோதுவது ஏன்? - காரணம் சொன்ன இயக்குநர் லோகேஷ்

‘மாநகரம்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ளை ‘கைதி’ இரண்டு படங்களை இயக்கிய லோகேஷ் கனராஜ், மூன்றாவது படத்திற்காக விஜயுடன் இணைந்திருக்கிறார். இளம் இயக்குநரான இவர் இயக்க இருக்கும் விஜயின் 64 வது படம் எப்படி இருக்கும், எந்த மாதிரியான ஜானராக இருக்கும், என்று கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

காரணம், எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாத லோகேஷ், பேஷன் டிசைனிங் துறையில் இருந்துவிட்டு, சினிமாவில் இயக்குநராகியிருப்பது தான். இப்படி மூன்றாவது படத்திலேயே முன்னணி மாஸ் ஹீரோவுடன் கைகோர்த்திருக்கும் லோகேஷ், விஜயை வைத்து இயக்கும் படம் குறித்து இப்போது பேசுவது சரியில்லை, முதலில் ‘பிகில்’ படத்தை கொண்டாடுங்கள், என்று கூறி வருகிறார்.

 

அதே சமயம், விஜயின் ‘பிகில்’ வெளியாகும் தீபாவளியன்று, கார்த்தியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘கைதி’ வெளியாவது சினிமாத்துறையினருக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி தான். கடந்த இரண்டு வருட தீபாவளிக்கு வெற்றி படத்தை கொடுத்த விஜய், இந்த தீபாவளியையும் டார்க்கெட் செய்தே தனது பிகில் படத்தை தொடங்கினார். ஆனால், ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்த கார்த்தியின் ‘கைதி’ திடீரென்று தீபாவளி வெளியீட்டாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

 

கார்த்தியின் இந்த தைரியத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனராஜ் காரணமோ! என்றும் பேசப்பட்டது. ஆனால், இது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கைதி பிகிலுடன் மோத என்ன காரணம், என்பதை கூறியிருக்கிறார்.

 

Director Logesh Kanagaraj

 

‘கைதி’ படத்தை ஆகஸ்ட் மாதம் தான் வெளியிட இருந்தார்களாம். ஆனால், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் முடியாததால், படம் முடிய தாமதம் ஆகிவிட்டதாம். மேலும், படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை வாங்கியவர்கள் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய விரும்பியதால், தமிழிலும் தீபாவளீக்கு ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாம். இதனால் தான் ‘கைதி’ தீபாவளிக்கு வெளியாகிறது, என்று கூறிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒரு படத்தை முடித்துக் கொடுப்பது தான் இயக்குநரின் வேலை. அதை எப்போது ரிலீஸ் செய்வது என்ற முடிவை தயாரிப்பாளர் மட்டுமே எடுப்பார், அந்த வகையில் கைதி ரிலீஸுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்றும் கூறியிருக்கிறார்.