Aug 09, 2019 04:13 AM

மனைவியை கொடுமை படுத்தியதால் தற்கொலை! - நடிகர் கைது

மனைவியை கொடுமை படுத்தியதால் தற்கொலை! - நடிகர் கைது

மனைவியின் தற்கொலைக்கு காரணமான நடிகரை போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தெலுங்கு நடிகரான மது பிரகாஷ், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். ‘பாகுபலி’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கும் இவரது மனைவி பாரதி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கூ போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 

அவர் தற்கொலைக்கு மது பிரகாஷ் அவரை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியது தான் காரணம், என்று புகார் அளிக்கப்பட்டது.

 

கடந்த 2014 ஆம் ஆண்டு மது பிரகாஷ் - பாரதி திருமணம் நடைபெற்றிருக்கிறது. அப்போதே மது வீட்டில் மதுவுக்கு ரூ.15 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து அவர் வரதட்சணை கேட்டு பாரதியை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், வீட்டுக்கு லேட்டாக வருவதும் என்று இருந்திருக்கிறார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்ததாகவும், பாரதியின் பெற்றோர் போலீசிடம் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து மது பிரகாஷை கைது செய்திருக்கும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.