அசுரனை மிஞ்சுமா சிலம்பரசனின் ‘அரசன்’?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் டி.ஆர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், படத்தின் அதலைப்பு அந்த எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது. ‘அரசன்’ என்ற இந்த தலைப்பை எஸ்.டி.ஆர் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், வெற்றிமாறனின் முந்தைய சூப்பர் ஹிட் படமான ‘அசுரன்’-னை இந்த அரசன் மிஞ்சுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாக உள்ள இப்படம் எஸ்.டி.ஆர்-ன்49 வது படமாகும். மேலும், இப்படத்தின் தலைப்பின் அறிவிப்பின் போது, சிலம்பரசனின் கதாபாத்திரம் குறித்த குறியீட்டை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.