Aug 11, 2019 11:32 AM

அந்த காட்சியில், அப்படி நடித்த யாஷிகா ஆனந்த்!

அந்த காட்சியில், அப்படி நடித்த யாஷிகா ஆனந்த்!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான யாஷிகா ஆனந்த், தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிக்கும் காமெடி படத்தில் கூட, சில கிலுகிலுப்பான காட்சிகளை இயக்குநர்கள் வைக்கிறார்களாம்.

 

ஆனால், தனது மீது இருக்கும் கவர்ச்சி என்ற என்ற இமேஜை உடைக்கும் விதமாக, ’ஜாம்பி’ படத்தில் சண்டைக்காட்சி ஒன்றில், டூப்பே இல்லாமல் யாஷிகா நடித்திருக்கிறாராம்.

 

ஹீரோ, ஹீரோயின் இல்லாத இப்படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க, யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். கவர்ச்சி காமெடிப் படமாக உருவாகும் இப்படத்தில், ஒரு சண்டைக்காட்சி இருக்கிறதாம். இதில், குதிப்பது, தாவுவது போல படமாக்கப்பட்ட இந்த சண்டைக்காட்சியில் யாஷிகா ஆனந்த் டூப் ஏதும் இல்லாமல் ரியலாக நடித்திருக்கிறாராம். காரணம், அவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவராம்.