Jun 10, 2019 11:26 AM

சாமி சிலை முன்பு ஆபாச போஸ்! - சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்

சாமி சிலை முன்பு ஆபாச போஸ்! - சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்

’இருட்டு அறை முரட்டு குத்து’ பட புகழ் யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். யோகி பாபுவுடன் ஜாம்பி என்ற படத்தில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியும் வருகிறார்.

 

இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுவரை அவர் வெளியிட்ட ஹாட் புகைப்படத்திற்கு லைக் போட்டு வந்த ரசிகர்கள், அவர் நேற்று வெளியிட்ட புகைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

 

அதாவது, விநாயகர் சிற்பம் முன்பு கவர்ச்சியாக நின்ற படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கும் யாஷிகா ஆனந்த், தனது துடை தெரியும்படியான உடையை அணிந்திருப்பது தான் சர்ச்சைக்கு காரணம்.

 

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கடவுள் முன்பு இப்படி அறைகுறை ஆடையுடன் நிற்பதா, என்று கூறி பலரும் யாஷிகா ஆனந்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

 

இதோ அந்த புகைப்படம், ]

 

Yashika Anand