Jul 29, 2018 06:39 PM

பிரச்சினையில் சிக்கிய யோகி பாபு - பரபரப்பு வீடியோ

பிரச்சினையில் சிக்கிய யோகி பாபு - பரபரப்பு வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை என்றாலும், தற்போது பெரிய பிரச்சினை ஒன்றில் சிக்கியுள்ளார்.

 

மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் திமுக தலைவர் மு.கருணாநிதி குறித்தும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறித்தும், சமூக வலைதளத்தில் யோகி பாபு தவறான கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகி அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆனால், இதை மறுத்திருக்கும் யோகி பாபு, என் பெயரில் போலியான சமூக வலைதளப் பக்கம் மூலம் இந்த தகவல் பரபரப்பப்பட்டு உள்ளது. என் பெயரில் பல போலியான ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் பல பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. நால் கருணாநிதி பற்றியும், ஓ.பி.எஸ் பற்றியும் எந்த கருத்தும் பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருப்பவர், அது குறித்த விளக்கம் அளித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

இதோ அந்த வீடியோ,