Apr 28, 2020 08:53 AM

கோழிக்கறி மூலம் பரவும் கொரோனா! - யோகி பாபு படத்தில் பகீர் தகவல்

கோழிக்கறி மூலம் பரவும் கொரோனா! - யோகி பாபு படத்தில் பகீர் தகவல்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் பல மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஒரு பக்கம் நோயின் தாக்கம், மறுபக்கம் நோய் பரவலை தடுக்க அரசு மேற்கொண்டிருக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கை, என இரண்டு தரப்பினாலும் மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியிருக்கிறார்கள்.

 

அந்த வகையில், தமிழகத்திலும் கடந்த ஒன்றரை மாதமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவால் பலர் பசியால் வாடுகிறார்கள். அதே சமயம், கொரோனாவை கட்டுப்படுத்தவும், மக்களை காப்பாற்றவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. என்னதான் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. எனவே, மருந்து கண்டு பிடிப்பு மட்டுமே கொரோனாவுக்கான தீர்வாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இதற்கிடையே, கோழிக்கறி மூலம் கொரோனா பரவுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகி அது வைரலானதால், கோழிக்கறி விலை கடும் வீழ்ச்சியடைந்தது. பிறகு கோழிக்கறி வியாபாரிகள் சங்கம், அரசு கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வராது என்று பிரச்சாரம் செய்ததால், தற்போது மக்கள் கோழிக்கறியை சாப்பிட தொடங்கியுள்ளார்கள். இதனால் கோழிக்கறியின் விலை, தங்கம் விலையை போல, வரலாறு காணாதா விலை ஏற்றத்தை கண்டு வருகிறது.

 

இந்த நிலையில், கோழிக்கறி மூலம் கொரோனா தாக்கப்படுவதாக யோகி பாபு ஹீரோவாக நடித்த படம் ஒன்றில் காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன அதிசயம் என்றால், கொரோனா பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பாக இந்த படத்தில் கொரோனா வைரஸை காட்டியிருப்பதோடு, அதை கொரோனா என்று குறிப்பிடாமல் சாதாரணமாக காட்டியிருக்கிறார்கள்.

 

Zombi News

 

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அப்படி அவர் ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்று தான் ‘ஜாம்பி’.இப்படத்தின் கதைப்படி, தொழிற்சாலை கழிவு ஒன்றில் உயிரிழந்த கோழிகளை ஒருவர் வீசிச்செல்ல, அதை எடுத்து கோழிக்கறி கடை ஒன்றில் ஒருவர் கொடுப்பார். அந்த கோழியை கறியாக அந்த கடைக்காரர் விற்பனை செய்ய, அந்த கறியை ஓட்டல் ஒன்றில் உணவாக பறிமாறுவார்கள். அந்த கோழிக்கறியை சாப்பிடும் மக்கள் ஜாம்பியாக மாறிவிடுவார்கள்.

 

இதில் எங்கே கொரோனா வைரஸ் என்று யோசிக்கிறீர்களா, இந்த கோழிக்கறியை சாப்பிட்டு ஜாம்பியாக மாறுபவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை, டைடில் கார்டின் போது காட்சியாக படத்தில் காட்டுவார்கள். அப்போது கோழிக்கறியை சாப்பிட்ட பிறகு உடலில் கொரோனா வைரஸ் உருவாகி, அது செல்களை தாக்குவதையும் காட்டுவார்கள்.

 

Zombi Movie News

 

ஆக, கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் தாக்கும், என்பதை முன்பே காட்சியாக காட்டியிருக்கும் ‘ஜாம்பி’ பட இயக்குநர் புவன் நல்லான், அதன் ஆபத்து குறித்து தெரிந்திருந்தால், அப்போது கொரோனா பற்றி படம் எடுத்திருப்பார். இருந்தாலும் தனக்கு தெரியாமலயே கோழிக்கறி மூலம் கொரோனா உருவாகும் என்பதையும், அதன் பயங்கரத்தையும் தனது சொல்லியிருக்கிறார்.

 

யோகி பாபுடன் யாஷிகா ஆனந்த், துரை, சுதாகர், பிஜிலி ரமேஷ், கார்த்திக், மனோபாலா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் காமெடி படமாக உருவான ’ஜாம்பி’ கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Zombi News