Feb 05, 2020 07:55 AM

திடீர் திருமணம் செய்துக் கொண்ட யோகி பாபு! - காரணம் இது தான்

திடீர் திருமணம் செய்துக் கொண்ட யோகி பாபு! - காரணம் இது தான்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, கோடி கோடியாய் சம்பாதித்தாலும், பெண் கிடைக்காமல் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருந்தார். அவரது குடும்பத்தார் பல ஆண்டுகளாக அவருக்கு பெண் தேடி வந்தாலும், எந்த பெண்ணும் அவருக்கு செட்டாகவில்லை.

 

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகி பாபுக்கு, பிப்ரவரி 5 ஆம் தேதி திருமணம் (இன்று) என்று தகவல் வெளியானது. நம் தளத்திலும் அது பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், அந்த திருமண தகவல் குறித்து மறுப்பு தெரிவித்த யோகி பாபு, தனது திருமணம் பற்றி தவறான தகவல் வெளியாகியுள்ளது, விரைவில் நான் முழு விபரத்தையும் வெளியிடுவேன் என்று கூறினாரே, தவிர தனக்கு பிபரவரி 5 ஆம் தேதி திருமணம் என்று கூறவில்லை.

 

இதற்கு காரணம், யோகி பாபுக்கு பெண் கொடுக்க பெண் வீட்டார் சம்மதித்தாலும், அவர்களது உறவினர்களுக்கு இதில் விருப்பம் இல்லையாம். இதனால், திருமணம் நடைபெறுமா என்பது யோகி பாபுக்கே சந்தேகமாக இருந்ததால் தான், அவர் அதிகாரப்பூர்வமாக திருமண தகவலை வெளியிடவில்லையாம்.

 

இந்த நிலையில், இன்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டது போல, யோகி பாபு - பார்கவி ஜோடிக்கு இன்று திருத்தணியில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.