May 03, 2019 07:42 AM

சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு! - அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு! - அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோரை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 காமெடி நடிகராக யோகி பாபு வலம் வருகிறார். கடந்த ஆண்டும் மட்டும் இவர் 20 படங்களில் நடித்திருக்கிறார். யோகி பாபு இல்லாத படங்களே இல்லை, என்று சொல்லும் அளவுக்கு ஒரு காட்சியிலாவது இவரை நடிக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர்கள் பலர் விரும்புகிறார்கள்.

 

இதற்கிடையே, விஜய், அஜித், ரஜினி என்று முன்னணி ஹீரோக்களின் படங்களிள் நடிக்க தொடங்கியதோடு, ஹீரோவாகவும் யோகி பாபு நடிக்க ஆரம்பித்திருப்பதால், அவருக்கான மவுசு தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்கிறது. காமெடி நடிகராக கை நிறைய படங்கள் வைத்திருப்பதோடு, ஹீரோவாக கலம் இறங்கியுள்ள யோகி பாபு ஒரு படத்தை இயக்கவும் செய்ய இருக்கிறார்.

 

இந்த நிலையில், யோகி பாபு தனது சம்பளத்தை நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தியிருக்கிறார். ஏற்கனவே யோகி பாபுவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள் பலர் அவரது சம்பள உயர்வால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.