Mar 27, 2020 05:40 AM

இளம் நடிகர் மரணம்! - அதிர்ச்சியில் தமிழ் சினிமா

இளம் நடிகர் மரணம்! - அதிர்ச்சியில் தமிழ் சினிமா

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். சென்னையின் பிரபல மருத்துவர்களில் ஒருவரான சேதுராமன், ’வாலிப ராஜா’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘50/50’ என தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வந்தார்.

 

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 7 மணியளவில் சேதுராமனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துவிட்டார். அவரது இறப்பு மருத்துவ துறையையும், தமிழ் திரையுலகையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Actor Sethuraman

 

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமன், சந்தானத்தின் ஆரம்பக்கட்டத்தில் அவருக்கு பல உதவிகள் செய்ததாகவும், அதற்காகவே அவரை தான் ஹீரோவாக்கியிருக்கிறேன், என்றும் சந்தானம் தெரிவித்திருக்கிறார்.

 

மேலும், இளம் வயதுடையவர் மற்றும் மருத்துவரான சேதுராமனுக்கு இப்படி மரணம் என்பதை, யாரலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் மருத்துவ துறையை அச்சமடைய செய்திருக்கிறது.