Jun 06, 2019 05:08 AM

அம்மா, பெண் இருவருக்கு பாலியல் தொல்லை! - பிரபல நடிகர் மீது பரபரப்பு புகார்

அம்மா, பெண் இருவருக்கு பாலியல் தொல்லை! - பிரபல நடிகர் மீது பரபரப்பு புகார்

தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிண்டிய மொழி சினிமாக்களில் பரவலாக பேசப்பட்டு வந்த மீ டு விவகாரம் கடந்த சில மாதங்களாக இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தும் விதத்தில் பல மீ டு புகார்கள் வெளியாகி வருகின்றன.

 

‘வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினின் தாயாக நடித்திருக்கும் நடிகை ஷாலு சம்மு, முன்னணி இயக்குநர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபல மலையாள நடிகர் விநாயகன் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.

 

விஷால், ஸ்ரேஷா ரெட்டி நடித்த ‘திமிரு’ படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக நடித்திருந்த விநாயகன், மலையாள சினிமாவில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், நடிகர் விநாயகன் மீது சமூக ஆர்வலர் மிருதுளா தேவி என்ற இளம்பெண் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

 

Vinayagn

 

இது குறித்து கூறிய மிருதுளா, “நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விநாயகனை தொலைபேசியில் அழைத்தபோது தன்னிடம் ஆபாசமாக பேசிய அவர், தான் மட்டுமல்லாது தன்னுடைய தாயும் சேர்ந்து அவர் விரும்பும்படி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என பாலியல் ரீதியாக கோரிக்கை வைத்தார்.” என குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஏற்கனவே பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விநாயகன், தற்போது பாலியல் புகாரில் சிக்கியிருப்பது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.