”’குருக்ஷேத்ரம்’ வளரும் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம்” - அர்ஜுன் பேச்சு

கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற பிரம்மாண்ட படமான் ‘குருக்ஷேத்ரம்’ தமிழில் விரைவில் வெளியாக உள்ளது. முனிரத்னா எழுதி தயாரித்திருக்கும் இப்படத்தை நாகன்னா இயக்கியுள்ளார். தமிழில் கலைப்புலி எஸ்.தாணு தமிழ்ப் பதிப்பை வெளியிடுகிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் அர்ஜுன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முனிரத்னா பேசுகையில், “இந்த விழாவில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கலைப்புலி எஸ் தானு அவர்கள். இந்த படத்தில் இடம் பெரும் இரண்டு சண்டைக் காட்சிகள் ஒன்று அர்ஜுன் இடம்பெறும் சண்டை, மற்றும் தர்சனின் சண்டை .இதை சண்டைப்பயிற்சி செய்தது 'கனல் கண்ணன்'. மகாபாரத கதையை பலவிதத்தில் எடுக்கலாம் .அந்த விதத்தில் நாங்கள் துரியோதனின் கதையை எடுத்திருக்கிறோம். இந்த மாதிரியான படம் கன்னட சினிமாவில் 80 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது .அதற்கு பிறகு கன்னடாவில் நாங்கள் இந்த படத்தினை எடுத்திருக்கிறோம். 3D மட்டும் 2 வருடங்கள் எடுக்கப்பட்டது. படம் நன்றாக வந்துள்ளது , கன்னட சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் வரவேற்ப்பையும் இப்படம் பெற்றுள்ளது. தமிழில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.” என்றார்.
நடிகர் அர்ஜுன் பேசுகையில், “இந்தப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. நான் விரும்பிய பாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம். நான் உழைத்ததை விட தர்ஷன் அதிகம் உழைத்துள்ளார் இந்த படத்தில் . அஜித் படத்தின் 50 வது படத்தில் நான் இருந்தது போல, தர்சனின் 50 வது படத்திலும் நான் நடித்துள்ளேன். படத்தில் நான் நடித்ததை விட வெற்றி பெற்ற ஒரு படத்தில் நான் நடித்தேன் என்பது எனக்கு பெருமை. கனல் கண்ணனின் சண்டைப்பயிற்சி முலம் கிளைமாக்ஸ் கதாயுதம் மூலம் நடக்கும் சண்டை வியக்கத்தக்க அளவில் வந்துள்ளது .இந்தப் படம் வளரும் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம், ஏனெனில் இது நம் கலாச்சாரத்தை விவரிக்கும் படம்” என்றார்.
இயக்குனர் நாகன்னா பேசுகையில், “படம் முனிரத்னா அவர்களின் மூலம் எடுக்கப்பட்டது, அந்த வகையில் நாங்கள் துரியோதனின் கதையை மையமாக வைத்து எடுத்திருக்கிறோம். 3டி படம் எடுக்க காரணமும் முனிரத்னா அவர்கள்தான் . இந்தப் படத்தில் தர்ஷன் மிகவும் பலம் வாய்ந்தவர் போல் காண்பிப்பதற்காக அவர் 35 கிலோ எடையை வைத்து நடிக்க வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு நடிகர்களின் மேல் காயம் விழும் அளவிற்கு நடிகர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் கர்ணன் துரியோதனின் நட்பு பலமாக பேசப்பட்டிருக்கிறது. இந்த படத்தினை பார்க்கும் உங்கள் கண்களில் தண்ணீர் வரவில்லை என்றாலும் தண்ணீர் தேங்கும் என்பது உறுதி” என்றார்.
தயாரிப்பாளர் தாணு பேசுகையில், “1985ல் நான் தயாரித்த முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை நடிக்க வைத்தேன். இப்படத்தில் அவரது நடிப்பு அற்புதமாக வந்துள்ளது .காதல், நட்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் இப்படத்தில் அடங்கியுள்ளது . கர்ணன் என்றால் நினைவிற்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் 'கர்ணன்' தான். அர்ஜூன் அவர்கள் அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். இயக்குநர் நாகன்னா பிரம்மாண்டமாக இயக்கி அதிக பொருட்செலவில் முனிரத்னா அவர்கள் தயாரித்த இப்படத்தை தமிழில் வெளியிடுவது மகிச்சியளிக்கிறது. படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும்” என்றார்.
நடிகர் தர்ஷன் பேசுகையில், “நான் சென்னையில் உள்ள அடையாரில்தான் படித்தேன், நான் லைட் பாய் ஆக தான் வேலைக்கு சேர்ந்தேன். மைதலாஜிகள் படத்தினை தைரியமாக தயாரிப்பாளர் கொண்டு வந்தால் அவரை ஊக்குவிக்க வேண்டும்.அந்த வகையில் நான் இப்படத்தை தேர்வு செய்தேன் .இந்தப் படத்தில் நாங்கள் நடித்தாலும் படத்தின் ஹீரோ முனிரத்னா தான். அவரின் பங்களிப்பே இப்படம் வெற்றியடைந்ததிற்கு காரணம் .இது போன்ற படங்கள் செய்வதற்கு முன்பு நிறைய பயிற்சி வேண்டும். அந்த அளவிற்கு படத்தில் நடித்துள்ளோம். வில்லன் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தியவர் அர்ஜுன் அவர்கள், அவரின் நடிப்பும் திறமையும் தனித்துவமானது. இந்தப் படத்தில் பல தரப்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் 3டி 2டி என இரண்டு முறை நடித்து மற்றும் டப்பிங் செய்துள்ளோம்.” என்றார்.
சண்டைப்பயிற்சி இயக்குனர் கனல் கண்ணன் பேசுகையில், “கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை காட்சிகளின் இறுதியில் படம் நாங்கள் பஞ்சபூதங்கள் மையமாக வைத்து எடுத்தோம் . ஆகையால் ஆரம்பம் முதலே பீமனிற்கு பூமி பலம் பெற்றவர் போல் காண்பித்து எடுக்கப்பட்டது. அதே போல், அர்ஜூன் அவர்கள் இந்தப் படத்தில் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார். படத்தில் வாய்ப்பளித்த முனிரத்னா, நாகன்னா மற்றும் தாணு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்தார்.
படத்தொகுப்பாளர் ஹர்ஷா பேசுகையில், “டப்பிங் முன்பு இந்தப் படத்தினை பார்த்தபோதே அருமையான இந்த படைப்பினை பார்த்து வியந்தோம் . படம் எடிட்டிங் செய்த பின்பும் இதே தான் எண்ணிணோம். இந்தப் படம் தாணு அவர்கள் மூலம் தமிழில் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பதை தெரிந்த பின் எங்களுக்கு படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது.” என்றார்.
இந்த மகாபாரத இதிகாசம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்கள் கெளரவர்கள் மற்றும் பாண்டவர்கள். இந்த படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனனாக தர்ஷன், கர்ணனாக அர்ஜுன், கிருஷ்ணராக வி.ரவிச்சந்தர், அர்ஜுனனாக சோனு சூட், சகுனியாக ரவிஷங்கர், சைபியாவாக ராக்லைன் வெங்கடேஷ், திரெளபதியாக ஸ்நேகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
ஹரி கிருஷ்ணா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு8 ஜெய் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜோ நி.ஹர்ஷா எடிட்டிங் செய்திருக்கிறார்.