விஜய் படங்களுக்கு இசையமைக்காதது ஏன்? - மனம் திறந்த யுவன்

தமிழ் சினிமாவின் முன்னண் இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துவிட்டார். அவரது இசைக்காகவும், குரலுக்காகவும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
பல முன்னண் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் யுவன் சங்கர் ராஜா, ‘புதிய கீதை’ படத்தின் மூலம் விஜய் படத்திற்கு இசையமைத்தார். ஆனால், அந்த ஒரு படத்தை தவிர இதுவரை யுவன், விஜய் படங்களுக்கு இசையமைக்கவில்லை. ஆனால், அஜித் படங்களுக்கு அவர் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இதனால், விஜய் ரசிகர்களுக்கு யுவன் மீது லேசான கோபம் இருக்கிறது.
இந்த நிலையில், இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய யுவன் சங்கர் ராஜா, “விஜயுடன் புதிய கீதை படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை, நானும் அதற்காக காத்திருக்கிறேன். மற்றபடி எங்கலுக்குள் ஏதும் இல்லை, விரைவில் நடக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.