Aug 07, 2025 07:20 PM

’ராகு கேது’ திரைப்பட விமர்சனம்

18a35b916f793b2e91e0d236eebb4f4c.jpg

Casting : Samuthirakani, Vignesh, Kasthuri, Sadna Shankar, Balasundaram

Directed By : D.Balasundaram

Music By : Sada Sudarsanam and Bharani Tharan

Produced By : Thamizharasan Theaters - Shanthi Balasundaram, V.Uma Devi, S.Anand

 

ராகு மற்றும் கேது கிரகங்கள் எப்படி உருவானது ?, அவை சூரியன், சந்திரன், குரு, புதன், சுக்ரன், சனி, செவ்வாய் ஆகிய 7 கிரங்களுடன் இணைந்து எப்படி நவகிரகங்களானது ? என்பதோடு, ராகு, கேதுவை எதற்காக வணங்க வேண்டும், என்ற புராணக்கதையை காட்சி மொழியில் சுவாரஸ்யமாக சொல்வது தான் ‘ராகு கேது’.

 

சிவனாக சில காட்சிகளில் தோன்றினாலும் சமுத்திரக்கனியின் திரை இருப்பு படத்திற்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது. துர்கா தேவியாக நடித்திருக்கும் கஸ்தூரியும், மஹா விஷ்ணுவாக நடித்திருக்கும் விக்னேஷும் கொடுத்த பணியை சிறப்பாக செய்து பார்வையாளர்கள் மனதில் தங்கி விடுகிறார்கள்.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாலசுந்தரம் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் சதா சுதர்சனத்தின் பாடல்களும், பரணி தரணின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

மோகன் பிரசாந்தின் ஒளிப்பதிவும், பி.லெனின் படத்தொகுப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

 

நவகரங்களைச் சேர்ந்த ராகு கேது பற்றிய கதைகளை நாம் கேட்டிருப்போம், ஆனால் அதை திரை மொழியில் காட்சிகளாக பார்க்கும் போது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. 

 

கே.பி.அறிவானந்தத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எளிமையாக இருந்தாலும் தெளிவாக புரியும்படி இருக்கிறது. புரணாக்கதையுடன் கிளைக்கதை ஒன்றை இணைத்து அமைக்கப்பட்ட திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

இயக்குநர் டி.பாலசுந்தரம், நாம் ஏற்கனவே கேட்ட கதையாக இருந்தாலும், அதை காட்சி மொழியில் சிறப்பாகவே சொல்லியிருக்கிறார். 

 

மொத்தத்தில், மேக்கிங்கி சில குறைகள் இருந்தாலும், கதை சொல்லல் மூலம் ‘ராகு கேது’ ரசிக்க வைக்கிறது.

 

ரேட்டிங் 2.7/5